×

நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகா அலுவலகங்களில் ஆக.12ல் பொது விநியோக திட்ட குறை தீர் முகாம்

நெல்லை, ஆக. 10: நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகா அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் இரண்டாவது சனிக்கிழமையான வருகிற 12ம் தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், மானூர், திசையன்விளை ஆகிய 8 தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இந்த தாலுகா அலுவலகங்களில் உள்ள குடிமை பொருள் வழங்கல், வட்ட வழங்கல் அலுவலகங்களில் மாதம் ஒரு முறை பொதுமக்கள் குறை தீர்ப்தற்காக குறை பொது விநியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கு இரண்டாவது சனிக்கிழமையான வரும் 12ம் ேததி நடக்கும் குறைதீர் முகாமில் பொது மக்கள் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல்அட்டை கோரி விண்ணப்பித்தல். குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொதுவிநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்யாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல் ஆகிய சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளிகள் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று மற்றும் குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் கை பேசி எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியை கொண்டு செல்ல வேண்டும். இந்த முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறையை 9342471314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகா அலுவலகங்களில் ஆக.12ல் பொது விநியோக திட்ட குறை தீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Theer Camp ,taluk ,Nellai district ,Paddy ,Distribution Scheme People's Grievance Redressal Camp ,8 Taluk Offices ,Distribution Scheme Grievance Redressal Camp ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...